Tuesday, December 1, 2009

இறகுகள்

எழுத படிக்க தெரியாத
கோழியிடம் எத்தனை
எழுத்தாணிகள்??

Monday, August 31, 2009

ஓடி வா

கை தட்டி அழைக்கும் ,
பஞ்சுமிட்டாய் பொம்மை.
விற்பவனின் பசியறிந்து.

Sunday, July 26, 2009

எப்படி?

மறந்து விடு என்றாள்!!
நினைக்க‌ ம‌ட்டும் தானே
க‌ற்று கொடுத்தாய்??

வயோதிகம்

என் கவிதைகளுக்கு
முகவரியாய் இருந்தவள்.
இன்று அவள் முகத்தில் வரிகள்

Thursday, July 16, 2009

மரங்கொத்தி

மூங்கில் காட்டில்
மரங்கொத்திகளுக்கு என்ன வேலை?
புல்லாங்குழல் செய்கிறதா?!!

Monday, July 13, 2009

பாலம்

மனிதர்களுக்கு உதவியாய்.
ஆற்றின் பயணத்தில்
இடைஞ்சலாய்.

Wednesday, July 8, 2009

வேகம்!!?


நிலவை துரத்தி துரத்தி காதலித்தன,
நட்சத்திரங்கள்.சில சமயம் பூமியில்
விழுவது கூட தெரியாமல்!!

Sunday, June 21, 2009

பறக்கும் ஒவியம்

ஆயிரம் வர்ணங்களீள்
இரண்டு பக்க தாளாய்
சிறகடிக்கும் பட்டாம்பூச்சி!

Friday, June 19, 2009

அன்பே...

அன்பை சொல்ல எனக்கு
ஆயிரம் கவிதை தேவை ...
உனக்கு ஒரு புன்னகை போதும் !

ரோஜா

அவள் நட்டு வைத்த
ரோஜா செடியில்
அவளே எப்படி பூக்களாய் ?

பசி

தெருவில் சிதறீ கிடந்த நெல்மணி,
வேகமாய் வரும் லாரி,
ஆட்டுக்கு மரண பசி!!