Wednesday, August 11, 2010

வலி

புரியாத நகங்கள்
வெட்ட வெட்ட
வளர்ந்தபடி
...................................................


பறிக்கும் போது சில 
பூக்களையாவது மீதம் 
விடுங்கள் -ரோஜா செடி 
....................................................

Saturday, August 7, 2010

தனிமை

படிக்க பிடிக்காத புத்தகம்
நண்பனாகும் தனிமை 
தழுவும் போது 

..............................................


நீண்ட சாலை 
காத்திருக்கும்  கடந்து
செல்லும் பயணிகளுக்காக 


.............................................


இளமையில் இனிக்கும்
முதுமையில் கசக்கும் 
தனிமை 


.............................................


உன் சிரிப்பொலி 
எதிரொலிக்கும் 
பிரிவின் முடிவில் 


..............................................

Sunday, July 18, 2010

இயற்கை

குளித்து தலை உதறினாள்
காற்றில்
மழைக்கால மரப்பெண்
.........................................................

சலிக்காமல் காதல் செய்யும்
சூரிய-தாமரை புரியாமல்
சுற்றும் குளக்கரை வாத்துகள்

..........................................................

விடிந்த பொழுதில் மேக
ஆடைகளை சரி செய்த
வானமகள்
............................................................


நிற்கவா ? போகவா ?
மழைக்காலத்து காற்று
மேகத்தை மிரட்டியது 
............................................................

Friday, July 2, 2010

ஏக்கம்

குப்பை கிளரும் போது
முட்டை ஓடுகள் 
ஏக்கத்துடன் பார்த்த கோழி 

Thursday, May 13, 2010


பரந்து விரிந்த வானம்
பிரிக்க முயன்று தோற்றது
முரட்டு மின்னல் கோடு

Monday, April 26, 2010

அமைதி பிடிக்காமல்

போகும் மௌனிப்பது
நீயானால் 

Wednesday, April 7, 2010

பார்வையில் பட்ட சில காட்சிகள் :

பிள்ளையாரோடு பேரம் பேசும்
பரீட்சை நேர மாணவன்
மதிப்பென்னுக்கு ‍‍‍ தேங்காய்

.....................................................
  
வியர்வை வழிய தள்ளும்
காய்கறி வண்டியின் முன்
"சுமை சுகமானது" வாசகம்

.....................................................



வண்ண வண்ண பூக்கள்
விற்கிறாள் விதவை பூக்காரி    
வெள்ளை புடவையில் 
.....................................................



மழைக்கு பயந்து ஒதுங்கியது
ஆடு கசாப்பு கடை
என்பது தெரியாமல்

......................................................


 

Tuesday, April 6, 2010

பனித்துளி

இரவு விடைசொன்னது
ஈரமான கண்களோடு
புல்வெளி

Sunday, April 4, 2010

பெண்ணே...

மௌனம் கூட ரசிப்பேன்
பேசாமல் மௌனிப்பது
நீயாய் இருந்தால்..

Friday, April 2, 2010

பிரசவம்

சிறந்த கவிதை

ஒவ்வொன்றும்
தலைப்பிரசவம் போல

Sunday, March 28, 2010

சாபம்

தூண்டில் புழுக்களின் சாபம்

மீன்களுக்கு உடனே
மரணம்

Thursday, March 25, 2010

கொம்பு

அழகாய் கொம்பு வளர்த்து
பின் வருத்தபட்டது மான்
வலையில் சிக்கியதும்

மேகமே

தினமும் புதுக்கவிதை ஆயிரம்

எழுத உனக்கு மட்டுமே
முடிகிறது மேகமே

தலைப்புக்கு வேலையில்லை

சிறந்த கவிதை

ஒவ்வொன்றும்
தலைப்பிரசவம் போல
................................................................


கோபுரம் மேல் நிழலில்
தூங்கும் பூனை.
யாரும் சகுனம் பார்க்கவில்லையா?

.................................................................



ஒவ்வொரு முறையும் கிணற்றில்
விழுந்து தற்கொலை செய்து
நீர் இறைக்கும் வாளி
..................................................................


Saturday, March 13, 2010

வலி

சிறந்த கவிதை
ஒவ்வொன்றும்
தலைப்பிரசவம் போல.

Wednesday, March 10, 2010

படையல்

காக்கை மீதம் வைக்கும்
உணவுக்கு காத்திருக்கிறது
பூனை பொருமையுடன்

Friday, March 5, 2010

அன்பே...

கவிதைகள் பல தந்தாய்.
தலைப்பாய் மட்டும்
நீயே நின்றாய்!

................?

அவள்
கன்னத்து மச்சத்துக்கு
கோபம்.
போட்டியாய் வந்த
புது மூக்குத்தியின் மீது!!

Monday, February 15, 2010

கிறுக்கல்‍ - 8

மகிழ்ச்சியா? வருத்தமா?
உடைந்த தேங்காய்
த(க)ண்ணீர் சிந்தியது

கிறுக்கல்‍ -.7

யானை பிடிக்க பொறிகுழி.
பெய்த மழையில் நிரம்பி
அத‌ன் தாக‌ம் தீர்த்த‌து.

கிறுக்கல்‍ ‍‍-6

காதலர் தினத்தில்
தாத்தாவும் பாட்டியும்
பூங்காவில் தயாராய்,
ரோஜா விற்று
வயிரு நிரப்ப‌

கிறுக்கல் -3

அம்மா இல்லாத போதுதான்
தெரிந்தது வீடு முழுக்க‌
அம்மா வாசம்

கிறுக்கல் - 2

எந்த பூவின் சாபம்??
அந்த தேன் கூடு
கலைக்கப்பட்டது

Sunday, January 24, 2010

கிறுக்கல் -1

சாமி சொல்லி தந்த‌
சிறுசேமிப்பு திட்டம்,
கோயில் உண்டியல்

Wednesday, January 20, 2010

கொலுசு

சும்மா ஆர்ப்பரிக்கிறது இந்த‌
கொலுசு ,அவள் கால்கலை
தழுவும் சந்தோஷத்தில்.