Saturday, August 15, 2015

எதிரிகளே!

எதிரிகளே! என் இளமை 
பருவம் மட்டும் தான் 
பாதுகாப்பானது உங்களுக்கு!
...................................................................
சினம் என்பது 
என் குணம் அல்ல 
சுபாவம்
....................................................................
வேட்டையாடுவது 
என் இரைக்கு மட்டுமல்ல 
அது என் விளையாட்டு 
....................................................................
என் கால் தடங்கள்  
இடும் பூமி எல்லாம் 
என்றும் போர்க்களம் தான்
....................................................................
ஆணவம் அல்ல 
என் வார்த்தைகள் 
அதுவே என் அம்சம் 
...................................................................

Tuesday, August 11, 2015

கவிதை உறவு

விரல் சூப்பும்
அழுமூஞ்சி பாப்பா
அம்மா தோளில்  சாய்ந்தபடி
...........................................................
பேரன் வருகைக்கு
பலகாரம் செய்து காத்திருக்கும்
கிராமத்து பாட்டி
..........................................................
இலவசமாய் தங்கையை
தூக்கி சுற்றும்
அண்ணன் ராட்டினம்
.........................................................
தூங்கும் போது
தலை கோதும் அப்பாவின்
மிடுக்கான அன்பு
.........................................................
தூர தேசத்து மகனின்
தொலைபேசி
மணியோசை
.........................................................

Wednesday, July 29, 2015

கலாம் - எங்கள் கனவு நாயகன் !

உன்னை போல் ஒரு பிள்ளை வேண்டும்
என ஏங்கியிருப்பால்  எங்கள்  இந்திய தாய் !

கடைகோடி தீவினிலே பிறந்து
கண்ட கனவுகள் நிறைவேற
பயணம் தொடங்கினாய் !

அறிவியல் அதிசயம் செய்தாய்
ஆசிரியர் என்றே பெருமை கொண்டாய்
நாடு முழுதும் அன்பை விதைத்தாய் !

தேசத்தின்  உச்சம் தொட்டாலும்
அதை விட நேசத்தில்
எல்லோர் இதயமும் கலந்தாய் !

கடமை முடிந்ததாய் நினைத்தாயோ ?!
எங்கள் கண்கள் குளமாக கனநேரத்தில்
காலன் துணைகொண்டு உறக்கம் கொண்டாய்!

தீவு பூமி தேடி திரும்பி வந்தாயே தமிழா
நிரந்தர உறக்கத்துடன் ...... நீ இல்லாத
தேசம் தவிக்கிறது கனத்த மனதுடன்!

இனி நிம்மதி நித்திரை கொள் ..
நீ விதைத்த கனவு விதைகள்
விருட்சமாய் உருவெடுக்கும்!

உன் எளிமையும் பண்பும் தன்னடக்கமும்
யுகங்கள் கடந்து தீராமல்
உன் பெருமை பேசும்!

எதிர்காலமே கனவு கொள்ளும்
மீண்டும் இந்தியத்தாய்
உன்னை ஈன்றெடுக்க.....

காத்திருப்போம் 
கலாம் அவர்களே
கனவுகளுடன் !!!

Monday, May 11, 2015

சுமை

பனியை சுமக்கும் புல் 
ஒருபோதும் நினைப்பதில்லை 
சுமையென்று 
.....................................................................

சுகமான எண்ணம் கூட 
சுமையாகி போகும் 
காதல் விரக்தியில் 
....................................................................

தொட்டில் சேலை 
என்றும் சொன்னதில்லை
பிள்ளையை சுமையென்று 
.................................................................... 

Sunday, May 10, 2015

காடு

மரங்களுக்குள் இல்லை 
ஜாதி சண்டை , எல்லாம் 
கலந்து வளர்ந்தபடி 
................................................................
சந்தோஷமாய் ஓடும் 
காட்டாறு அம்மா மடியில் 
தவழும் பிள்ளையாய் 
.................................................................
சத்தமிடும் பறவைகள் 
காய்ந்த இலை சிறகுகள் 
மௌனம் கலைக்கும் முயற்சியில் 
................................................................
கம்பீர காவல் தெய்வங்கள் 
எல்லையில் வரவேற்கும் 
கானக வீட்டுக்குள் 
................................................................