Thursday, April 30, 2020

கிறுக்கல்கள்

இத்தனை பூக்கள்
இந்த ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌மரத்தில்!
வியக்கலாமா விதைகள்?

Tuesday, April 14, 2020

மழைக்காலம் - 1

பரந்து விரிந்த வானம்
பிரிக்க முயன்று தோற்றது
முரட்டு மின்னல் கோடு

………………………………………….

சின்னதாய் 
குடை விரித்து 
காளான் தயார் என்றது 

...........................................................

வானம் பார்த்தபடி 
பள்ளி செல்லும் 
மழலை கூட்டம் 

............................................................

Saturday, April 22, 2017

உன் கண்கள்

அவளின் சூரியப்பார்வை
படாத என காத்திருக்கும்
என் கவிதை மொட்டுகள்....

.......................................................

மேகமானவை
மோகமானவை
மாயமானவை

......................................................

சிரிக்க முத்தமிட
கட்டியணைக்க தெரிந்த
அதிசய விழிகள்

......................................................

உன் ஒருதுளி கண்ணீர்
என் உயிர்பிரிக்கும்
விஷம் என்பேன் அன்பே

Tuesday, May 3, 2016

நட்பு

வகுப்பறையின்
மதிய உணவு சண்டை
இன்னும் பசுமையாய் மனதில் 
.................................................................

நண்பனின் சட்டையும்
நட்பாய் பொருந்தும்
எனக்கு

.................................................................

முதல் காதல்
தோல்விக்கு நண்பனே
மருந்து :)

..................................................................

Saturday, April 30, 2016

வெய்யில்

இளநீர்  கிழவி வியர்த்து 
நிற்கிறாள் நிழலில் 
இளநீர்  வெட்டி ஓய்ந்து 
................................................................

மனிதம் எஞ்சியுள்ளதை 
சொல்ல அங்காங்கே 
மோர் பந்தல்கள் 
................................................................

அம்மா முந்தானை 
குடையில் அழகாய் 
குழந்தை சாய்ந்தபடி ...
...............................................................

தாகம் தீர்க்க குருவிகளுக்கு 
நீர் பாத்திரங்கள்!
குருவிகள் எங்கே ?????
............................................................... 

Saturday, August 15, 2015

எதிரிகளே!

எதிரிகளே! என் இளமை 
பருவம் மட்டும் தான் 
பாதுகாப்பானது உங்களுக்கு!
...................................................................
சினம் என்பது 
என் குணம் அல்ல 
சுபாவம்
....................................................................
வேட்டையாடுவது 
என் இரைக்கு மட்டுமல்ல 
அது என் விளையாட்டு 
....................................................................
என் கால் தடங்கள்  
இடும் பூமி எல்லாம் 
என்றும் போர்க்களம் தான்
....................................................................
ஆணவம் அல்ல 
என் வார்த்தைகள் 
அதுவே என் அம்சம் 
...................................................................

Tuesday, August 11, 2015

கவிதை உறவு

விரல் சூப்பும்
அழுமூஞ்சி பாப்பா
அம்மா தோளில்  சாய்ந்தபடி
...........................................................
பேரன் வருகைக்கு
பலகாரம் செய்து காத்திருக்கும்
கிராமத்து பாட்டி
..........................................................
இலவசமாய் தங்கையை
தூக்கி சுற்றும்
அண்ணன் ராட்டினம்
.........................................................
தூங்கும் போது
தலை கோதும் அப்பாவின்
மிடுக்கான அன்பு
.........................................................
தூர தேசத்து மகனின்
தொலைபேசி
மணியோசை
.........................................................