Wednesday, April 7, 2010

பார்வையில் பட்ட சில காட்சிகள் :

பிள்ளையாரோடு பேரம் பேசும்
பரீட்சை நேர மாணவன்
மதிப்பென்னுக்கு ‍‍‍ தேங்காய்

.....................................................
  
வியர்வை வழிய தள்ளும்
காய்கறி வண்டியின் முன்
"சுமை சுகமானது" வாசகம்

.....................................................



வண்ண வண்ண பூக்கள்
விற்கிறாள் விதவை பூக்காரி    
வெள்ளை புடவையில் 
.....................................................



மழைக்கு பயந்து ஒதுங்கியது
ஆடு கசாப்பு கடை
என்பது தெரியாமல்

......................................................


 

2 comments:

  1. பிள்ளையாருக்கு தேங்காய் உடைத்தால், யார் பிள்ளையார் வந்தா பரீட்சை எழுதுவது... சமுதாய சீர்த்திருத்த சிந்தனை வாழ்க...

    ReplyDelete
  2. பிறர் நம்பிக்கையை
    நாம் ஏன் உடைக்க வேண்டும்?

    ReplyDelete