வானம் பார்த்த வகுப்பறை
உடைந்த கதவில்
திண்டுக்கல் பூட்டு
...........................................................
"ழ"கரம் சொல்லி தந்த
தமிழ் பேசும்
பிரம்பு
...........................................................
கூட்டி கழித்து விரல்
தேய்த்த புரியாத
கணக்கு பாடம்
...........................................................
ஆசிரியர் முகம் மறந்தாலும்
என்றும் நினைவில் நிற்கும்
மிட்டாய் கடை தாத்தா மீசை
............................................................
அனைத்தும் அருமை..
ReplyDeleteநன்றி ! உங்க வருகைக்கு . உங்கள் ப்ளாகில் நான் தான் 200 -ஆவதாக பின்தொடர்பவன் .:)
ReplyDelete2 ம்
ReplyDelete4 ம்
எனக்கு
நிரம்ப
பிடித்திருக்கிறது.